ஒன்றுபட்ட ஹக்கீம், அநுரகுமார, மனோ

0
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக செயற்பட தீர்மானித்துள்ளன.
இந்த செயற்பாட்டில் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ளவும் முடிவு செய்யபட்டுள்ளது. ஜேவிபி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஜேவிபி சார்பாக அனுர குமார திசாநாயக்க எம்பி, விஜித ஹேரத் எம்பி, மனோ கணேசன் எம்பி, ரவுப் ஹக்கீம் எம்பி, வேலுகுமார் எம்பி, உதயகுமார் எம்பி, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், தமுகூ-ஜமமு கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முருகேசு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இன சிறுபான்மை கட்சிகளும் (Ethnic Minority Parties) , அரசியல் சிறுபான்மை கட்சிகளும் (Political Minority Parties) ஒருமுகமாக எதேச்சதிகார தேர்தல் முறை மாற்ற நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.