கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ?

0
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்றுள்ள போதிலும் அறுதிப் பெரும்பான்மையை பெற தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.