மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகைக் காலம்!

0
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகைக் காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று (21) செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தெரிவித்தார்.
கொவிட் சூழ்நிலையால் அவர்கள் மின் கட்டணத்தைத் தவணைகளில் செலுத்த வேண்டும்.அத்துடன் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களின் மாதாந்த தவணைக்குச் சிறிய வட்டி வசூலிக்கப்படுமெனவும்,வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி குறித்து நுகர்வோருக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.