இலங்கை தலைநகரில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி போராட்டத்தில் குதித்த மக்கள்

ஊரடங்கு சட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் ஆகிய இடங்களில் பெருமளவிலான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்ததையடுத்து மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை அதிபர் அவசரகால நிலையை பிரகடப்படுத்தினார். இருந்தும் அதனையும் மீறி மக்கள் போராட்டம் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button