முடக்கப்பட்டதா சமூக வலைத்தளங்கள்?

நாட்டில் நலவிவரும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக நள்ளிரவில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி உருவாகியுள்ளது. அல்லது இயல்பாக நடைபெற்ற ஒன்றா என்று இதுவரை தெரியவில்லை. இலங்கை பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள இந்நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏற்பாடுகள் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டங்களின் போது பாரிய சேதங்கள் மற்றும் உயிராபத்துக்கள் ஏற்படுவதோடு நாட்டில் அமைதியின்மையும் நிலவும் என்ற காரணம் காட்டி இலங்கை அதிபரினால் அவசரகால நிலை பிரகடனப்பபடுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 02.04.2022 நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button