சமூகம்
ஜனாதிபதி வேட்பாளர்கள்: ஆணைக்குழுவின் மக்களுக்கான அறிவிப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து செலவு அறிக்கைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் தேர்தல் செலவு அறிக்கை காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்ட விசாரணை) சிந்தக குலரத்னவிடம் நாம் வினவிய போது, சட்டத்தின் பிரகாரம் செலவின அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் கடைசி நாளிலிருந்து பத்து நாட்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.