கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவத்தில் திருவிழாக்கள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று(22) மாலை 04 மணிக்கு தேரோட்டப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர் வடம் பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலயவெளிவீதியில் முற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படுவது இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.